திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் தி.மு.க எம்.பியுமான கனிமொழிக்கு நேற்று திடீரென மயக்கம் ஏற்பட்டதால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உடல் அளவிலும், மன அளவிலும் சோர்வாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது கனிமொழிக்கு திரவ மருந்து சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுவதாகவும், அவரது உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், மற்றும் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று கனிமொழியிடம் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

கனிமொழி இன்று காலை முதல் சகஜமாக பேசத்தொடங்கிவிட்டதால், இன்று மாலை அல்லது நாளை காலை வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply