ராஞ்சி: சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடரில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில், சென்னை, பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதுகின்றது. டைட்டன்ஸ் (தென் ஆப்ரிக்கா), ஐதராபாத் (இந்தியா) அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து வெற்றி பெற்ற உற்சாகத்தில் சென்னை அணி உள்ளது.அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, “ஹாட்ரிக்’ வெற்றியுடன் அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்யுமா சென்னை அணி.

இரண்டு போட்டியிலும் முதல் ஓவரில் “டக்-அவுட்’டான முரளி விஜய் அடித்து வேண்டும். இதுவரை பெரிய அளவில் சோபிக்காத மைக்கேல் ஹசி, சிறந்த துவக்கம் கொடுக்க வேண்டும். இதுவரை 131 ரன்கள் (47+84) எடுத்துள்ள சுரேஷ் ரெய்னாவின் ரன் வேட்டை இன்றும் தொடர வாய்ப்புள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிராக 16 பந்தில் அதிவேக அரைசதம் அடித்த கேப்டன் தோனி, இன்றும் சிக்சர் மழை பொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை தவிர, பத்ரிநாத், டுவைன் பிராவோ, ரவிந்திர ஜடேஜா உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில் மீண்டும் ஒருமுறை அதிகமான  இலக்கை பதிவு செய்யலாம்.

சென்னை அணியின் பந்துவீச்சும் எதிர்பார்த்தபடி சிறப்பாக இல்லை. வேகத்தில் மோகித் சர்மா, ஆல்பி மார்கல் சிறப்பாக பந்துவீச்ச  வேண்டும். ஐதராபாத் அணிக்கு எதிராக தலா 2 விக்கெட் வீழ்த்திய ஜேசன் ஹோல்டர், டுவைன் பிராவோ இன்றும் அசத்தலாம் .

டிரினிடாட் (வெஸ்ட் இண்டீஸ்), டைட்டன்ஸ் (தென் ஆப்ரிக்கா) அணிகளுக்கு எதிரான அடுத்தடுத்து தோல்வி கண்ட பிரிஸ்பேன் அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. மீதமுள்ள போட்டிகளில் நல்ல “ரன்-ரேட்’ அடிப்படையில் சிறந்த வெற்றியை பதிவு செய்தால், மற்ற போட்டிகளின் முடிவைப் பொறுத்து அரையிறுதி வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் இது, எளிதான காரியமல்ல. ஏனெனில் கடந்த இரண்டு போட்டியிலும் எதிரணி நிர்ணயித்த மிகக் குறைந்த ஸ்கோரை (135, 123 ரன்கள்) “சேஸ்’ செய்ய முடியாமல், சொற்ப ரன்னில் (110, 119 ரன்) சுருண்டது.

Leave a Reply