shadow

விஷாலின் அதிரடி திட்டத்திற்கு அஜித்-விஜய் முட்டுக்கட்டையா?

தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருக்கும் விஷால் திரைத்துறையினர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் பல அதிரடி நடவடிக்கைகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் தயாரிப்பாளர்களின் பெரிய செலவாக கருதப்படுவது ஹீரோக்களின் சம்பளம் தான். அதுவும் மாஸ் நடிகர்களின் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். ஹீரோக்களின் பெரிய சம்பளத்தில் கிட்டத்தட்ட பாதி தொகையை தயாரிப்பாளர்கள் அட்வான்ஸாக கொடுக்க வேண்டிய நிலை தற்போது உள்ளது. இந்த தொகைக்கு வட்டியை கணக்கிட்டால் அதுவே ஒரு பெரிய தொகையாக இருப்பதால் தயாரிப்பாளர்களின் வட்டிச்செலவை குறைக்க விஷால் ஒரு அதிரடி திட்டத்தை முன்வைத்துள்ளார்.

இனிமேல் மாஸ் நடிகர்கள் உள்பட அனைத்து ஹீரோக்களுக்கும் அவர்களது சம்பளத்தில் 10% மட்டுமே அட்வான்ஸ் தொகையாக தரப்படும். மீதி 90% படம் முடிந்து வியாபாரம் ஆகிய பின்னர் ரிலீசுக்கு ஒரு வாரத்திற்கு முன் தரப்படும். இதற்கு அனைத்து நடிகர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று புதிய திட்டத்தை முன்வைத்துள்ளார். ஆனால் இந்த திட்டத்திற்கு அஜித், விஜய் ஆகியோர் முட்டுக்கட்டை போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply