தெற்கு மும்பையை சேர்ந்த தம்பதிக்கு 1999ம் ஆண்டு திருமணம் ஆனது. 12 வயதில் மகன் இருக்கிறான். கணவனுக்கு சொந்த தொழில். நானா சவுக் என்ற இடத்தில் கடை.

கணவன் வேலைக்கு போனதும் பக்கத்து வீட்டுக்காரன் அடிக்கடி தன் வீட்டுக்கு வந்து போனதை தெரிந்து விவாரத்து கோரி விண்ணப்பித்தார் கணவன்.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனைவியும் கள்ளக் காதலனும் தங்கள் தொடர்பை மறுத்தனர். கணவன் தன்னை மிரட்டி, வற்புறுத்தி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாக மனைவி புகார் சொன்னார்.

வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

கணவன் மிரட்டி வாக்குமூலம் வாங்கியிருந்தால் போலீசில் புகார் செய்திருக்கலாம். அவர் செய்யவில்லை.  மேலும் தனது மகனோடு மனைவியும், அவருடைய கள்ளக் காதலனும் எடுத்துக் கொண்ட போட்டோவில் மூன்று பேருமே மிகவும் இயல்பாக இருக்கிறார்கள். பையனுக்கு மிகவும் பரிச்சயமானவராகத்தான் மனைவியின் காதலன் இருந்திருக்கிறார். எனவே இருவருக்கும் நெருங்கிய உறவு இருந்திருக்கிறது என்பது  தெரிகிறது.

கணவன் – மனைவிக்குள் இருக்க வேண்டிய பரஸ்பர நம்பிக்கையை மனைவி இழந்து விட்டார். எனவே, கணவனின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் விவாகரத்து வழங்குகிறது. மேலும் கள்ளக் காதலில் ஈடுபட்டு அதனால் விவாகரத்து பெற்றதால், ஜீவனாம்சம் கேட்கும் உரிமையை மனைவி இழந்து விட்டார். அவருக்கு கணவன் ஜீவனாம்சம் தர வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு மும்பை நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.

Leave a Reply