shadow

அதிமுகவை எதிர்ப்பதுபோல் திமுகவை எதிர்க்காதது ஏன்? ராகுல்காந்தி விளக்கம்
Gujarat- Rahul - Tour
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது ப.சிதம்பரம் உள்பட பல தலைவர்கள் மேலிடத்தில் புகார் கூறியதால் அவர் பதவியில் இருந்து தூக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் முடியும் வரை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் இல்லை என ராகுல்காந்தி திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ராகுல்காந்தி, “தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை மாற்றும் எண்ணம் இல்லை. தேர்தல் வரும் சமயத்தில் மாநிலத் தலைமையில் மாற்றம் தேவையில்லை என்று கருதுகிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், முன்னாள் மாநிலத் தலைவர்கள், காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரை வரும் 20-ம் தேதி எனது வீட்டில் ஆலோசனை நடத்த வருமாறு அழைத்துள்ளேன். அதில், கட்சி வளர்ச்சியை  கருத்தில் கொண்டு,  கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக  செயல்படுமாறு அனைவருக்கும் அறிவுறுத்தவுள்ளேன்.

அதன் பின்னர் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்படுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக,  மாநிலத் தலைமை எடுக்கும் முடிவைக் கட்சி மேலிடம் அங்கீகரிக்கும். தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வை எதிர்ப்பது போல, தி.மு.க.வை எதிர்க்காதது மாநிலக் கட்சித் தலைமையின் உரிமைக்கு உள்பட்டது.

Leave a Reply