டாஸ்மாக், சட்டமன்றம் மட்டும் மூடவில்லை, ஏன்? துரைமுருகன் கேள்வி

டாஸ்மாக், சட்டமன்றம் மட்டும் மூடவில்லை, ஏன்? துரைமுருகன் கேள்வி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன என்பது தெரிந்ததே. பள்ளி கல்லூரிகள் மட்டுமின்றி வணிக வளாகங்கள் திரையரங்குகள் பெரிய கடைகள் மற்றும் தி நகர் ரங்கநாதன் தெரு முழுவதுமே கடைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸ் பீதி காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்து வருவது என்பது பாராட்டுக்குரியதாகும். இந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் சட்டசபை ஆகிய இரண்டு மட்டும் மூடப்படாமல் இருப்பது ஏன்? என திமுக எம்எல்ஏ நேம் துரைமுருகன் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்

இந்த கேள்வியால் சட்டமன்றங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply