shadow

ஆங் சான் சூச்சி மியான்மர் கலவரத்தை ஏன் தடுக்கவில்லை? உலக நாடுகள் கேள்வி

மியான்மரில் பவுத்த மதத்தினருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த மாத இறுதியில் கலவரம் ஏற்பட்டது. இதன்காரணமாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு ராக்கைன் மாகாண பகுதிகளில் பல்வேறு கிராமங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பலர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து தப்பி வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 90 ஆயிரம் பேர் வங்கதேசம் சென்றுள்ளனர். அவர்களுக்கு போதிய இருப்பிட வசதி, உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. சுமார் 30 ஆயிரம் பேர் மலைப்பகுதிகளில் உணவு, தண்ணீர், மருந்து இன்றி பரிதவித்து வருகின்றனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்துக்கு மியான்மர் ராணுவமும் ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மியான்மரின் மூத்த தலைவர் ஆங் சான் சூச்சி, கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக நாடுகள் கேள்வி கேட்டு வருகின்றன.

Leave a Reply