விஜய் படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதி ஏன்?

விஜய் படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதி ஏன்?

கடந்த சில நாட்களாக ஒட்டுமொத்த திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் நேற்று விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’, சசிகுமாரின் ‘நாடோடிகள் 2’ மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய மூன்று படங்களின் படப்பிடிப்புகளுக்கு மட்டும் சிறப்பு அனுமதி தரப்பட்டது.

இதனால் இந்த மூன்று படங்களின் படப்பிடிப்புகளும் நேற்று நடைபெற்றது. இதற்கு பிரபல தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

‘ஃபெப்சி அமைப்பில் வேலை செய்கிற தொழிலாளர்கள், விஜய் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்ல வேலை செய்றாங்க. அவங்கதான் என்கிட்ட, அங்கே ஷூட்டிங் நடக்கிற விஷயத்தைச் சொன்னாங்க. சினிமா ஸ்டிரைக் எல்லோருக்கும் பொதுவானது. அதைமீறி இந்த மாதிரியான விஷயங்களை செய்வது சரி கிடையாது. இதுல ரெண்டு விஷயங்களைக் கவனிக்கணும். விஜய் படத்துல வேலை செஞ்சிட்டு இருக்கிற சிலர், ஃபெப்சி அமைப்பைச் சேர்ந்தவங்க. இவங்க மற்ற சில படங்களிலும் வேலை பார்க்கிறாங்க. இந்த ஸ்டிரைக் காரணமா ஃபெப்சி அமைப்பினர் பலபேர் வேலையில்லாம முடங்கிப் போயிருக்காங்க. இவ்வளவு சீரியஸா சினிமா ஸ்டிரைக் நடந்துக்கிட்டு இருக்கும்போது, பொறுப்பான இடத்துல இருக்கிற நாம படப்பிடிப்பை நடத்தக்கூடாதுனு விஜய்க்குத் தெரியதா என்ன…

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து, ‘நாங்கதான் விஜய் படத்துக்கு ஸ்பெஷல் பெர்மிஷன் கொடுத்தோம். ஏன்னா, அவங்க பெரிய லெவல்ல செட் போட்டிருந்தாங்க’னு சொல்றாங்க. ஆனா, இந்தத் தகவல் வெளிவந்ததே தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த துரைராஜ்கிட்ட இருந்துதான். விஜய் படத்துக்கு மட்டும் ஸ்பெஷல் பெர்மிஷன் கொடுத்தா, பிரச்னை வரும்ங்கிறதால வேறு சில சின்னப் படங்களுக்கும் அனுமதி கொடுத்திருக்காங்க. இதுக்குப் பதிலா, ஷூட்டிங் பாதியில நிற்கிற 40 படங்களுக்கும் சேர்த்து அனுமதி கொடுத்திருக்கலாமே?.

இதைப்பத்தி நான் கவுன்சில் பொறுப்புல இருக்கிற தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுகிட்ட பேசினேன். ‘அப்படியா, இதைப்பத்தி எனக்கு எந்தத் தகவலும் தெரியலையே!’னு சொன்னார். இன்னும் சிலபேர் என் போனைக்கூட எடுக்கலை. என்னைப் பொருத்தவரைக்கும் சினிமா ஸ்டிரைக் நடந்துட்டு இருக்கும்போது, படப்பிடிப்பு நடக்ககூடாது, எல்லாத்தையும் நிறுத்தணும். எல்லோருடைய உணர்வுக்கும் மரியாதை கொடுக்கணும்” என்று கூறியுள்ளார். இதற்கு தயாரிப்பாளர் சங்கம் என்ன விளக்கம் அளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Why special permission to vijay movie?

Leave a Reply