shadow

பேரறிவாளன் தாக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா?

10ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையிலிருந்து வரும் பேரறிவாளனை ஆயுள் தண்டனை கைதி ராஜேஷ்கண்ணா தாக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த தாக்குதல் எதனால் நடந்தது என்பது குறித்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து சிறை அதிகாரிகள் கூறியபோது, ‘பேரறிவாளன் இருக்கும் அறைக்கு எதிர் வரிசையில் ராஜேஷ் கண்ணா என்ற கைதி அடைக்கப்பட்டு உள்ளார். தஞ்சாவூரைச் சேர்ந்த இவர், ஆள் கடத்தல் உட்பட பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர். அவருக்கு 2002-ம் ஆண்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. முதலில் திருச்சி மத்திய சிறையிலும், பிறகு புழல் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்ட ராஜேஷ் கண்ணா, கடந்த மூன்றரை ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

ராஜேஷ் கண்ணா மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கு உள்ளது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதால், 2002-ல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2011-ல் திருச்சி மத்திய சிறையில் இருந்த ராஜேஷ் கண்ணா, அங்கு கைதிகளுக்கு நன்னெறி வகுப்பு எடுக்க வந்த கன்னியாஸ் திரியை கத்தியால் குத்தியுள்ளார். செல்போன், போதை வஸ்துக்கள் போன்றவற்றை சிறைக்குள் கைதிகள் பயன்படுத்துகிறார்களா என்று கண்காணிக்க தேடுதல் குழு உள்ளது. ஆனால், இந்தத் தேடுதல் குழுவே சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.

பெரிய பெரிய குற்றங்களில் ஈடுபட்டு சிறைக்கு வரும் சமூகவிரோதிகளுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுக்கவும், அவர்களின் சட்டவிரோத செயல் பாடுகளைக் கண்டு கொள்ளாமல் இருக்க பணம் வாங்குகிறார்கள். இவர்களைப் பற்றி யாரோ சிறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்கள். அதனால், சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்​பட்டு உள்ளது. ‘புகார் செய்தது பேரறிவாளன்தான். அதனால் உன்னை சாதாரண சிறைக்கு மாற்றப்​போகிறார்கள்’ என்று தேடுதல் குழுவைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் கண்ணாவிடம் சொல்லியிருக்கிறார்கள். அதுதான், இந்தத் தாக்குதலுக்குக் காரணம்” என்று கூறினர்

Leave a Reply