நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நேற்று தேர்தலில் வாக்களிக்க வில்லை என்பதும் வாக்களிக்க அதற்கு அவர் கூறிய காரணம் அவரது டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து பார்த்திபன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு!
வருத்தமும், இயலாமையும்.

இரண்டாம் தவனை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது. டாக்டருக்குக் போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன்.

எனவே தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது. என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *