shadow

கேரள அரசை கமல்ஹாசன் பாராட்டியது இதற்குத்தானா?

திரையுலகை பொருத்தவரையில் கமல்ஹாசன் ஒரு மேதை என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. ஆனால் திரையுலகை தாண்டி அவரது செயல்கள் சிலசமயம் அல்ல, பலசமயம் விநோதமாக இருக்கும். அவருக்கும் அவரது மனைவிகளுக்கும் இடையிலான கருத்துவேறுபாடு அவரது சொந்த பிரச்சனை என்பதால் அதை கண்டுகொள்வதில்லை. ஆனால் நேற்று கமல்ஹாசன் கேரள அரசை பாராட்டி இமெயில் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அண்டை மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில் நல்லாட்சி அங்கு நடைபெற்று வருவதாக கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

கேரளாவில் பினராயி விஜயன் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் இந்த ஒருவருடத்தில் 21 அரசியல் கொலைகள், 1.75 லட்சம் குற்றங்கள், 7000 தலித்துக்கு எதிரான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கண்ணூர் பகுதியில் காஷ்மீரை விட மோசமான நிலையில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பல வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளது. தமிழகத்தில் பாராட்டும் வகையில் எந்த சாதனைகளும் இந்த வருடத்தில் நடக்கவில்லை என்பது உண்மைதான்.

அதே நேரத்தில் தமிழக அரசை வெறுப்பேற்றுவதற்காகவே கேரள அரசை புகழ்ந்துள்ள கமல்ஹாசன், அங்கு எந்த மாதிரியான ஆட்சி நடக்கின்றது என்பதை அறிந்து கொண்ட பின்னர் பாராட்டுவது நல்லது என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. தான் செவாலியே விருது பெற்றபோது தன்னை வாழ்த்திய முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றிக்கடனாக அவர் இந்த பாராட்டை தெரிவித்துள்ளார் என்ற அளவில் நாம் எடுத்துக்கொள்வோம்

மேலும் உலகமே புகழும் பாகுபலி 2′ படம் குறித்து ஒருசில வார்த்தைகள் பாராட்டி கூற கமலுக்கு மனம் வரவில்லை என்பதற்கு இந்த சாதனைகள் அவரால் நிகழ்த்தப்படவில்லை என்பதையே பலர் புரிந்து கொள்ள முடிகிறது.

Leave a Reply