shadow

2007 உலகக் கோப்பை தோல்விக்கு என்ன காரணம்? முதன்முறையாக மனம்திறந்த சச்சின்

கடந்த 2007ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி லீக் போட்டிகளிலேயே தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியது. இதற்காக சச்சின் உள்பட அனைவருக்கும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த தோல்விக்கான காரணத்தை சச்சின் தற்போது தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று ‘சச்சின் தி பில்லியன் டிரீம்ஸ்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த சச்சின், ‘2007ஆம் ஆண்டு உலக்கோப்பையின்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் செப்பல், தொடருக்கு ஒரு மாதம் முன்பாக ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். அந்த மாற்றங்கள் அணியை வெகுவாக பாதித்தது. உலகக் கோப்பை தொடருக்காக வெஸ்ட் இண்டீஸ் புறப்படுவதற்கு முன்பாக இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகத்திடம் இதுகுறித்து தெளிவாக எடுத்துரைத்தேன் என்று சச்சின் கூறியுள்ளார்.

Leave a Reply