shadow

என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன்: கமல்ஹாசன் உறுதி

நடிகர் கமல்ஹாசன் இன்று சென்னை வேளச்சேரியில் உள்ள கனரா வங்கி டிஜிட்டல் கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, தன்னுடைய ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன் என்றும், இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும் என்றும் கூறினார்.

மேலும் இதற்கான பயணத்தை அடுத்த மாதம் தொடங்கவிருப்பதாக கூறிய கமல், அடுத்த மாதம் தொடங்க உள்ள பயணத்தில் பல சகோதரர்கள் தனக்கு கிடைப்பார்கள் என நம்பிக்கை தெரிவீத்தார்.

மேலும் இந்தியாவில் கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகியவை சரியாக இல்லை என்றும், அவற்றை சரிசெய்யவே தான் அரசியலுக்கு வந்துள்ளதாகவும் இவை அனைத்தும் டிஜிட்டலில் சரிசெய்ய தான் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply