காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகனும், காங்கிரஸ் துணைத்தலைவருமான ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த ஸ்மிரிதி இராணி அவர்களுக்கு கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் மக்கான் கேலியான கருத்து கூறியுள்ளர்.
கல்வி அமைச்சராகியிருக்கும் ஸ்மிரிதி இராணி, பட்டதாரி இல்லை. ஒரு பட்டதாரியால்தான் கல்வி அமைச்சர் நிர்வாகத்தை திறம்பட வகிக்க முடியும் என்றும் கூறியுள்ளார். ‘
இதற்கு பதிலடி கொடுத்துள்ள காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, “கல்வி அமைச்சராக உள்ளவர் கற்றிருக்கவேண்டும் என்றால், விமான போக்குவரத்து துறையை கவனிப்பவர் விமானியாக இருக்கவேண்டும் என மக்கான் கூறுவாரா? என கேள்வியெழுப்பிய அவர், இது முற்றிலும் முட்டாள்தனமான கருத்து” என்று கூறியுள்ளார்.
மேலும் மக்கானின் கருத்து குறித்து நீர்வளத்துறை அமைச்சர் சந்தொஷ் கங்வார் பதிலளித்தபோது,.” முதலில் சோனியா காந்தியின் கல்வித்தகுதி என்ன என்பதை மக்கான் தெரிந்துகொண்டு அதன்பின்னர் இராணியின் கல்வித்தகுதி குறித்து பேசட்டும் என்று கூறியுள்ளார்.