திமுக வெற்றியை தடுத்தது கருணாநிதிதான் .சு.சுவாமி குற்றச்சாட்டு

திமுக வெற்றியை தடுத்தது கருணாநிதிதான் .சு.சுவாமி குற்றச்சாட்டு
Subramanian-Swamy
இந்த தேர்தலில் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்ததாகவும், ஆனால் திமுக தலைவர் கருணாநிதியின் தவறான முடிவுகளே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டதாகவும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக கருணாநிதி அறிவித்திருந்தால் தி.மு.க., வெற்றி பெற்றிருக்கும் என்றும் அதை செய்யாததால் திமுகவுக்கு கிடைக்க வேண்டிய இளையதலைமுறையினர் ஓட்டுக்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சோனியா காந்திக்கு  நீதிமன்றம் தண்டனை வழங்கும் என்றும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Leave a Reply