shadow

சுயலாபத்திற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறதா திமுக?

stalinகாவிரி பிரச்சனைக்காக அனைத்து கட்சி கூட்டத்தை இன்று கூட்டுவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ், தமாக உள்ளிட்ட ஒருசில கட்சிகள் ஒப்புக்கொண்டிருந்த போதிலும், மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்பட பல எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள போவதில்லை என்று அறிவித்துள்ளன. இந்நிலையில் இந்த அனைத்து கட்சி கூட்டத்தால் என்ன லாபம்? என்பதை பார்ப்போம்

மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதாக திமுக அறிவித்திருப்பது குறிப்பாக தஞ்சை தொகுதி மக்களின் ஓட்டுக்களை கவர்வதற்காக அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே இந்த கூட்டத்தால் திமுக ஓட்டு வங்கியை அதிகரிக்கவே பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தின் மூலம் ஓட்டு சேகரிப்பதை திமுக திட்டமிட்டுள்ளதை மக்கள் நலக்கூட்டணி உள்பட ஒருசில கட்சிகள் உணர்ந்து கொண்டதால், இந்த கூட்டத்தில் அந்த கட்சிகள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி கட்சி என்ற முறையில் திமுக என்ன சொன்னாலும் தலையாட்டும் நிலையில் காங்கிரஸ் இருப்பதால் கூட்டணியில் கலந்து கொள்கிறோம் என்று அறிவிப்பதை தவிர அந்த கட்சிக்கு வேறு வழியில்லை.

எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்க இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஆதரவு தருவதாகவே தமாக அறிவித்துள்ளது.

அனைத்து கட்சி கூட்டத்தால் எந்த பயனும் இல்லை என்று தெரிந்தேதான் திமுக இந்த கூட்டத்தை கூட்டுகிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மூலம் கிட்டத்தட்ட தமிழக அரசு வெற்றி பெறும் நிலையில் உள்ளதால், அந்த வெற்றியின் பெருமை முழுமையாக ஆளும் கட்சிக்கு சென்றுவிட கூடாது என்பதே திமுகவின் திட்டமாக இருக்கலாம்.

தோல்வி அடையப்போகும் கர்நாடகாவிற்கு நிச்சயம் அனைத்து கட்சி கூட்டம் தேவைதான். ஆனால் வெற்றி பெற போகும் தமிழகத்திற்கு இது தேவையற்றது என்பதே பலரது கருத்தாக உள்ளது.

Leave a Reply