shadow

Vijayakanthதமிழத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இடம்பெற்ற தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் தொகுதிகளை பிரித்துக்கொள்ள குடுமிப்பிடி சண்டை போட்டன. போராடி வாங்கிய தொகுதிகளில் வெற்றி பெற எந்த கட்சியும் உருப்படியாக வேலை செய்யவில்லை. ஒரு கட்சியை இன்னொரு கட்சி எப்படி கவிழ்க்கலாம் என்ற சிந்தனையிலேயே இருந்தது.

தமிழகத்தின் பாரதிய ஜனதா கூட்டணியில் சண்டை போட்டு 14 தொகுதிகள் வாங்கிய  விஜயகாந்தின் தேமுதிக கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்து 29 தொகுதிகள் வெற்றி பெற்ற விஜயகாந்த், தன்னுடைய சொந்த செல்வாக்கு காரணமாகத்தான் அந்த தொகுதிகள் வெற்றி பெற்றதாக கர்வம் கொண்டார். அவருடைய கர்வத்திற்கு மரண அடி தற்போது கிடைத்துள்ளது.

கூட்டணி சேருவதில் குழப்பம், பாஜக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் கூட்டணியில் சேரப்போவதாக நாடகமாடியது, முதிர்ச்சியற்ற தேர்தல் பிரச்சாரம், உளறலான அறிக்கைகள் இவையெல்லாம் சேர்ந்ததுதான் தேமுதிகவின் அரசியல் நடவடிக்கையாக இருந்தது. வாக்காளர்கள் விஜயகாந்தை ஒரு அரசியல் கோமாளியாகத்தான் பார்த்துள்ளனர் என்பது தேர்தல் முடிவை வைத்து தெரிகிறது.

தனித்து நின்றும் தமிழகத்தில் 37 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் அதிமுக உள்ளது. வாக்காளர்கள் பாரதிய ஜனதாவையும், அதிமுகவையும் பிரித்து வைத்து பார்க்கவில்லை என்பதுதான் தேர்தல் முடிவு தரும் செய்தி.

Leave a Reply