மக்களின் சந்தேகத்தை தீர்க்கும் கொரோனா சிறப்பு அதிகாரி

நேற்று சென்னை மாநகராட்சி அறிவித்த ஒரு அறிவிப்பில், கொரோனா பரிசோதனை செய்ய வந்தாலே அவரும், அவருடைய குடும்பத்தினர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்தது

இந்த அறிவிப்பால் கொரோனா பரிசோதனை செய்ய வருபவர்கள் கடும் அச்சம் அடைந்த நிலையில் இதுகுறித்து கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

சென்னையில் பரிசோதனை செய்யும் தனிநபர்கள் மற்றும் குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப் படுத்தப் படுவர் என்கிற உத்தரவு சென்னையில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையே, மக்களை பயமுறுத்தும் நோக்கமல்ல.

கொரோனா தொற்று பரிசோதனை செய்த பின்னர் முடிவுகள் வரும் இரண்டு நாட்களுக்குள் தொற்று பாதித்து உள்ள நபர் மூலம் பலருக்கும் தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த விதமான பரவலை தடுக்கும் நோக்கத்தில் தான் சென்னை மாநகராட்சி இம்முடிவை எடுத்துள்ளது

Leave a Reply