பேருந்து கட்டணம் உயர்ந்தது ஏன்? தினகரன் கண்டுபிடித்த காரணம்

பேருந்து கட்டணம் உயர்ந்தது ஏன்? தினகரன் கண்டுபிடித்த காரணம்

இன்று தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் சுமர் 50% உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். பேருந்தில் டிக்கெட் எடுக்கும் ஒவ்வொரு பயணியும் அதிருப்தி காரணமாக தமிழக அரசை திட்டிக்கொண்டு உள்ளதை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் இந்த பேருந்து கட்டணத்தை பொதுமக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறிய ஆர்கே நகர் தொகுதி எம்.எல்.ஏ தினகரன், தமிழக அமைச்சர்கள் குறிப்பாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்கள் பலர் பஸ் ரூட்டுக்க்கு அதிபதியாக இருப்பதால் அவர்களுடைய சொந்த லாபத்திற்காக பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Leave a Reply