ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் இழக்காதது ஏன்? தினகரன் விளக்கம்

ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் இழக்காதது ஏன்? தினகரன் விளக்கம்

சென்னை ஆர்கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளரான தினகரன் அமோக வெற்றி பெற்ற நிலையில் அதிமுகவுக்கு இரண்டாவது இடமும், திமுகவுக்கு 3வது இடம் மட்டுமின்றி டெபாசிட்டும் பறிபோனது.

இந்த நிலையில் ஆர்.கே.நகரில் திமுக முறையாக வாக்கு சேகரித்து இருந்தால் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும் என்று டிடிடிவ் தினகரன் கருத்து கூறியுள்ளார். மேலும் 2ஜி வழக்கில் சிபிஐ சரியாக செயல்படாததால் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வரும் தினகரன், தற்போது திமுகவையும், அதன் தலைவர்களையும் தாக்க தொடங்கிவிட்டதால் தினமும் அவர் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறார்

மேலும் சட்டப்பேரவையில் கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பேன் என்று டிடிவி தினகரன் கூறி வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்குள் தமிழகம் முழுவதும் பிரபலமாகிவிடுவார் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.