வெறும் 130 கோடி போதுமே!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது 20 லட்சம் கோடி சிறப்பு திட்டங்களை அறிவித்தார்

அந்த திட்டங்கள் குறித்து கடந்த 4 நாட்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்

ஆனால் இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்து, ஏழை எளிய மக்களிடம் பயனாக போய் சேர்வதற்கு இன்னும் எத்தனை நாள் ஆகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக பசியும் பட்டினியுமாக இருக்கும் ஏழைகளுக்கு இந்த திட்டம் பலனளிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது

இந்த நிலையில் நெட்டிசன்கள் ஒரு முக்கிய கருத்தைக் கூறியுள்ளனர். இந்தியாவில் மொத்தம் 130 கோடி மக்கள் தான் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு கோடி கொடுத்தால் கூட 130 கோடி தான் செலவழியும் எதற்காக 20 லட்சம் கோடி செலவு செய்ய வேண்டும்? பேசாமல் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு கோடி கொடுத்து விடுங்கள் அவர்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள் என்று கூறியுள்ளனர்

நெட்டிசன்கள் இந்த கருத்து நடைமுறைக்கு சாத்தியமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply