shadow

next ulaga nayaganகடந்த ஒரு மாதகாலமாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை ஊடகங்களிலும், இணையதளங்களிலும் தொடர்ந்துகொண்டே இருந்தது. விஜய் விருதுகள் வழங்கும் விழாவில் விஜய் பேசும்போதுகூட இதை குறிப்பிட்டு பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போதுதான் சூப்பர் ஸ்டார் பிரச்ச்னை ஓய்ந்திருக்கும் நிலையில் தற்போது ‘அடுத்த உலக நாயகன் யார்” என்ற பிரச்சனையை புதிதாக அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் கிளப்பியுள்ளனர்.

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று குமுதம் நாளிதழ் வெளியிட்டது முதலே பிரச்சனை ஆரம்பமானது. அது பின்னர் கே.எஸ்.ரவிகுமாரின் போலி டுவிட்டர் அக்கவுண்ட் வரை சென்று ஓய்ந்திருக்கும் நிலையில் இன்று ஃபேஸ்புக்கில் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் அடுத்த உலக நாயகன் யார்? என்பது குறித்து கருத்து மோதல்கள் செய்து வருகின்றனர்.

எங்கள் ‘தல’க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் தேவையில்லை ஏனெனில் அவர்தான் அடுத்த உலக நாயகன் என்று  அஜீத் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உலக நாயகன் கமல்ஹாசனே விஜய்யைத்தான் பல நிகழ்ச்சிகளில் நேரடியாக பாராட்டியுள்ளார். உலக நாயகனினால் பாராட்டு வாங்கிய விஜய்தான் அடுத்த உலக நாயகன் பட்டத்திற்கும் பொருத்தமானவர் என்று விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பேசுவதற்கு எத்தனையோ உருப்படியாக கருத்துக்கள் இருக்கும் நிலையில் சுப்பர் ஸ்டார் பட்டம் குறித்தும், உலக நாயகன் பட்டம் குறித்தும் தேவையில்லாமல் மோதி வருவது குறித்து நடுநிலையானவர்கள் தங்கள் அதிருப்தியையும் அதே சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இது எங்குபோய் முடியப்போகிறது என்பது தெரியவில்லை.

Leave a Reply