shadow

தமிழகத்தின் புதிய கவர்னர் யார்? பரபரப்பான தகவல்

ROSAIAH_765667fசமீபத்தில் தேர்தல் முடிந்து புதிய அரசு ஏற்றிருக்கும் தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் புதிய கவர்னர்களை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றனர்.

பதவிக்காலம் முடியவுள்ள சில மாநில கவர்னர்களையும் அத்துடன் மத்திய மாநில அரசுகளிடையே சுமுகமான உறவைக் கடைப்பிடிக்கும் முயற்சியாகவும் 7 மாநிலங்களில் புதிய கவர்னர்களை நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆலோசனை செய்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழக கவர்னர் ரோசய்யாவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் முடிவடையவுள்ளதால் இங்கு புதிய ஆளுனராக மூத்த வழக்கறிஞர் ஒருவர் கவர்னர் பதவியை ஏற்பார் என்றும் குஜராத் முதல்வர் ஆனந்தி பஞ்சாப் மாநில கவர்னர் பதவியில் அமர்த்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது. எனவே தமிழகம் உள்பட ஏழு மாநிலங்களுக்கு நியமிக்கப்படும் ஆளுநர்களின் பெயர்கள் விரைவில் இறுதி செய்யப்படும் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply