shadow

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இசையமைப்பாளர் யார்? சஸ்பென்ஸ் உடைகிறது

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையவுள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் பிழைப்பேனா?’ என்று தொடங்கும் பாடலின் டீசர் வரும் 25ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை இயக்குனர் சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ள நிலையில் இந்த பாடலின் டீசரை அந்த இசையமைப்பாளரே வெளியிடவுள்ளதாக இயக்குனர் கவுதம் மேனன் அறிவித்துள்ளார். எனவே வரும் 25ஆம் தேதி இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்? என்ற சஸ்பென்ஸ் முடிவுக்கு வருகிறது.

ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், மேக்னா ஆகாஷ், ராணா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.ஜான் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.

Leave a Reply