shadow

Vijay-New-Photos-in-Jilla-2விஜய்யின் 58வது படமான புலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவரது அடுத்த படத்தை இயக்க ‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லி தயாராகி வருகிறார். விஜய் 59 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விஜய் தனது 60வது படத்தை இயக்கும் இயக்குனர் குறித்தும் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதுவரை விஜய் தனது 60வது படத்திற்காக ஐந்து இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளதாகவும், இறுதி முடிவை அட்லி படம் தொடங்கவுள்ள நேரத்தில் வெளியிடுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த ஐந்து பேர்களில் பிரபல இயக்குனர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, கே.வி.ஆனந்த் ஆகியோர்களும் உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

விஜய் – அட்லி இணையவுள்ள படத்தில் நயன்தாரா நாயகியாக நடிப்பார் என செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் விஜய் 60 படத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகள் போட்டி போட்டுக்கொண்டிருப்பதாகவும், இந்த போட்டியில் ஸ்ரீதிவ்யாவும் இணைத்து பேசப்பட்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply