புதினா? யார் அவர்? அதிர்ச்சி அடைய வைத்த டொனால்ட் டிரம்ப்

புதினா? யார் அவர்? அதிர்ச்சி அடைய வைத்த டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் முதல்கட்டமாக நட்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். பிரிட்டன் பிரதமர் தெரசா மே உள்பட பல தலைவர்களை சந்தித்து வரும் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த டிரம்ப், ‘புதினா? யார் அவர் என்று செய்தியாளர்களை திருப்பி கேட்டுள்ளார். இதனால் செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். புதின் யாரென்று தனக்கு தெரியாது என்றாலும் ரஷ்யாவுடன் இணைந்து ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக பணியாற்ற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் ‛அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து ஐ.எஸ்.,க்கு எதிராக பணியாற்றும் என்றும் ஐ.எஸ்., தான் உலகின் மாபெரும் நோய் என்றும் டிரம்ப் கூறினார். உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஐ.எஸ்க்கு எதிராக தங்களால் முடிந்த பங்கினை அளிக்க வேண்டும்’ என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply