shadow

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது யார்?

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்றிரவே முழுமையாக வந்துவிட்ட நிலையில் அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜக மற்றும் காங்கிரஸ் + மதஜ கூட்டணி முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இருவருமே கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர்.

104 தொகுதிகளை பெற்றுள்ள பாஜகவுக்கு ஆட்சி அமைக்க இன்னும் 8 எம்.எல்.ஏக்கள் தேவை. ஆனால் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணிக்கு 117 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் இந்த கூட்டணி ஆட்சி அமைப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது.

இந்த நிலையில் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க யாரை அழைப்பார் கவர்னர் என்பதை அரசியல் விமர்சகர்கள் உற்று நோக்கி வருகின்றனர். பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தால் மஜத எம்.எல்.ஏக்கள் விலை பேசப்படுவார்கள் என்றும் அல்லது ராஜினாமா செய்ய வலியுறுத்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இன்றுக்குள் கவர்னர் தனது முடிவை அறிவிப்பார் என்பதால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply