பாமக கட்சிக்கு தென்சென்னை, அரக்கோணம், ஆரணி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், சிதம்பரம், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் போட்டியிட இருகட்சிகளும் சேர்ந்து முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடும் தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த எட்டு தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் ஏற்கனவே அறிவித்திருந்த பாமக வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படுவார்கள் என அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வரும் திங்கட்கிழமை பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள தேமுதி, பாமக, மதிமுக, பாரதிய ஜனதா ஆகிய நான்கு கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.