ராகவா லாரன்ஸ் கொடுத்த ரூ.50 லட்சம் எங்கே?

ராகவா லாரன்ஸ் கொடுத்த ரூ.50 லட்சம் எங்கே?

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் முதல்கட்ட கொரோனா தடுப்பு நிதியாக ரூ.3 கோடி வழங்கவிருப்பதாக அறிவித்தார். அதில் தமிழக முதல்வரின் நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி வரை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி கொடுத்தவர்கள் பட்டியலில் அஜித், சிவகார்த்திகேயன் பெயர் இருந்ததே தவிர ராகவா லாரன்ஸ் பெயர் இல்லை. இந்த நிலையில் சற்றுமுன் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி கொடுத்தவர்களின் 2வது பட்டியல் வெளிவந்துள்ளது. இதிலும் ராகவா லாரன்ஸ் பெயர் இல்லை.

இருப்பினும் இனிமேல் அவர் தான் அறிவித்த நிதியை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் இன்று அம்மா உணவகத்திற்காக ரூ.50 லட்சம் நிதி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply