shadow

‘விவேகம்’ படத்தின் 3வது பாடல் கர்நாட்டிக்: அனிருத் தகவல்

அஜித் நடித்த விவேகம்’ படத்தின் சர்வைவா மற்றும் தலை விடுதலை பாடல்கள் இணையதளங்களில் பெரும் சுனாமியை ஏற்படுத்திய நிலையில் வெகுவிரைவில் 3வது பாடல் வெளிவரவுள்ளதாக அனிருத் கூறியுள்ளார்.

முதல் இரண்டு பாடல்கள் போல் இல்லாமல் இந்த மூன்றாவது பாடல் கர்நாட்டிக் பாடலாக இருக்கும் என்றும் இந்த பாடல் ரசிகர்களுக்கு வித்தியாசமான ரசனையை தரும் என்றும் அனிருத் கூறினார்.

மேலும் ‘சர்வைவா பாடலுக்கும் தல விடுதலை பாடலுக்கும் இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் இந்த இரண்டு பாடல்களையும் வெற்றி பெற செய்த அஜித் ரசிகர்களுக்கு தனது நன்றிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply