திரையரங்குகள் மூடப்படுவது ஏப்ரம் 1 முதலா? மார்ச் 16 முதலா?

திரையரங்குகள் மூடப்படுவது ஏப்ரம் 1 முதலா? மார்ச் 16 முதலா?

கியுப் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை. இதனால் திரையரங்குகளில் கூட்டம் இல்லை என்பதால் வரும் ஏப்ரல் 1 முதல் திரையரங்குகள் மூடப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் திடீரென சில மணி நேரம் கழித்து தமிழக அரசின் 8 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து மார்ச்16-ந்தேதி முதல் திரையரங்குகளை மூடுவது என்று தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

எனவே இருவேறுபட்ட செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளதால் திரையரங்குகள் எப்போது முதல் மூடப்படும் என்று புரியாமல் ரசிகர்கல் குழப்பம் அடைந்துள்ளனர்.

Leave a Reply