shadow

எனக்கு ஏதாவது நடந்தால்தான் ஸ்டாலின் முதல்வராக முடியும். கருணாநிதி

stalinஉத்தரபிரதேச முதல்வராக இருந்த முலாயம்சிங் யாதவ் உள்பட பல மாநிலங்களின் முதல்வர்கள் தாங்கள் உயிருடன் இருக்கும்போதே தங்களுடைய வாரிசுகளை முதல்வர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்ததுண்டு. ஆனால் திமுக தலைவர் கருணாநிதி தான் இருக்கும்வரை முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்றும், தனக்கு பின்னரே தனது மகன் ஸ்டாலின் முதல்வராக முடியும் என்று கருத்தை நேற்றைய பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.

முதல்வர் பதவிகாக இலவு காத்த கிளிபோல பல வருடங்களாக மு.க.ஸ்டாலின் காத்திருப்பதுதான் உண்மை என்ற நிலையில் ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி மீது விருப்பம் இல்லை என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

பாமக கட்சியில் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளார். ஆனால் கருணாநிதி தன்னை முதல்வர் வேட்பாளராக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஏக்கத்தில் இருக்கும் ஸ்டாலினுக்கு இது ஏமாற்றமாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

என்.டி.டி.வி நிருபர் ஸ்டாலின் முதல்வராக ஆவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்லும் அவரது ஆதரவாளர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்ற கேட்ட கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, ” மு.க. ஸ்டாலின் முதல்வராவதற்கு வாய்ப்பு வரவேண்டுமென்றால் இயற்கை எனக்கு ஏதாவது செய்தால்தான் உண்டு.” எனக் கூறியுள்ளார். இந்த பதில் மு.க.ஸ்டாலினின் ஆதரவாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply