shadow

ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி எப்போது வருவார்? பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

18-jayalalitha-modi8-600-jpgதமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மூன்று வாரங்களுக்கும் மேல் உடல்நலம் குன்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை பார்க்க ராகுல்காந்த், அமித்ஷா, அருண்ஜெட்லி, மற்றும் பல மாநில முதலமைச்சர்கள் சென்னை வந்து சென்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்படும் பிரதமர் மோடி இன்னும் சென்னை வரவில்லை என்ற செய்தி பரவி வரும் நிலையில் இதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பிரதமர் மோடி வந்து பார்க்க வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து கிடையாது. ஆனால் பிரதமர் வரும்போது முதல்-அமைச்சரை சந்திக்கும் சூழ்நிலை, அவருடைய உடல்நிலை இவற்றை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட வேண்டும். பிரதமர் மட்டும் முடிவு எடுக்கக்கூடிய விஷயம் அல்ல. ஆகவே அதை மனதில் கொண்டு பிரதமர் உரிய நேரத்தில் உரிய வகையில் முதல்-அமைச்சரை சந்திக்க சென்னை வரும் முடிவுகளை எடுப்பார்.

எனவே ஜெயலலிதா குணமாகி கிட்டத்தட்ட டிஸ்சார்ஜ் செய்யப்படும் நிலையில் மோடி சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply