shadow

ஒருநாள் போட்டியில் தோனி ஓய்வு பெறுவது எப்போது?

cricket dhoniடெஸ்ட் போட்டியில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற தோனி தற்போது ஒருநாள் மற்றும் 20 ஓவர்கள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற தோனி, அடுத்து வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டி வரை கேப்டனாக நீடிப்பார் என்றும் உலககோப்பை முடிந்தவுடன் அவர் ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

35 வயதான டோனி தற்போது பேட்டிங்கிலும், விக்கெட் கீப்பிங்கிலும் திறமையுடன் இருந்துவரும் நிலையில் வரும் 2019-ம் ஆண்டு உலக கோப்பை வரை டோனி விளையாடலாம் என்றும் இருப்பினும் அவர் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு பிறகே உலகக்கோப்பையில் விளையாடுவதை உறுதி செய்வார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் முன்னாள் வீரர்களான ரவிசாஸ்திரி, ஆசிஷ் நெக்ரா, கிரண்மோரே, விக்ரம் ரத்தோர் ஆகியோர் 2019 உலக கோப்பை வரை டோனி விளையாட வாய்ப்பு அதிகம் என்றும், ஒய்வு முடிவை அவரே எடுக்கும் வரை அவரை ஓய்வு பெற யாரும் வற்புறுத்தும் எண்ணம் இல்லை என்றும் கூறுகின்றனர்.

Leave a Reply