shadow

தனுஷின் ஹாலிவுட் படம் தொடங்குவது எப்போது?

தனுஷ் இயக்கிய ‘பவர்பாண்டி’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது. மேலும் அவர் நடித்து வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, மற்றும் ‘வடசென்னை’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தனுஷ் நடிக்கவுள்ள ஹாலிவுட் படமான ‘The Extraordinary Journey of the Fakir’ என்ற படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளதாக இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் விரிஅவில் பெல்ஜியம் நாட்டின் பிரச்சல்ஸ் நகருக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே அஜித்தின் ‘விவேகம்’, மற்றும் விஜய்யின் ‘தளபதி 61’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது தனுஷூம் ஐரோப்பா நாட்டிற்கு செல்லவுள்ளார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply