10,11,12 வகுப்பு துணைத்தேர்வுகள் எப்போது?!! எப்படி விண்ணப்பிப்பது?

students

இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் 94.99% மாணவிகள் மற்றும் 84.86% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 41,376 மாணவர்கள் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,11 ஆம் வகுப்பு துணைத்தேர்வை எழுதும் மாணவர்கள் ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அதன்படி,https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் அல்லது அரசு தேர்வுகள் சேவை மையங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.