தேவையானவை:

கோதுமை மாவு – ஒன்றரை கப்,
கோஸ் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
உருளைக்கிழங்கு – ஒன்று,
பச்சைப் பட்டாணி – ஒரு டேபிள்ஸ்பூன்,
துருவிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கேரட் – ஒன்று (துருவிக் கொள்ளவும்),
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
துருவிய பனீர் – 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, வெது வெதுப்பான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

• உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.

• பட்டாணியையும் வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

• கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சீரகத்தை போட்டு இதில் துருவிய கோஸ், வெங்காயம், கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும்.

• மசித்த உருளைக்கிழங்கு, பட்டாணி, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து நன்றாக கிளறி கீழே இறக்கவும். இதுதான் பூரணம்.

• பிசைந்த மாவில் பெரிய எலுமிச்சை சைஸ் மாவு எடுத்து பிசைந்து எண்ணெய் தடவிய சப்பாத்திக்கல்லில் வைத்து பரத்தவும். திரட்டிய சப்பாத்தியில் கால் பாகம் தவிர்த்து, நடுவில் 2 டீஸ்பூன் பூரணத்தை வைத்து உருட்டும் வகையில் நீளமாக பரத்தவும்.

• சப்பாத்தியின் நாற்புறமும் தண்ணீர் தொட்டு தடவி, சப்பாத்தியை ரோலாக உருட்டி, விளிம்புகளை ஒட்டிவிடவும்.

• குழிவான தவாவை சூடாக்கி, ரோலை வைத்து சுற்றிலும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் – நெய் கலவையை ஊற்றவும்.

• ரோலின் அடிபாகம் சிவந்ததும் திருப்பிப் போடவும்.

• ரோல் நன்றாக சிவந்ததும், மேலாக பன்னீர் தூவியோ அல்லது பன்னீரை ரோலின் உள்ளே வைத்தோ சூடாக பரிமாறவும்

Leave a Reply