shadow

இந்த ஆண்டு இறுதியில் வாட்ஸ் அப் சேவை திடீர் நிறுத்தம். பயனாளிகள் அதிர்ச்சி

whatsapp_2215218fஒருசில வகை ஸ்மார்ட்போன்களில் இந்த ஆண்டு இறுதியில் இருந்து வாட்ஸ் சேவைகள் தொடராது என்று வாட்ஸ் அப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பிளாக்பெரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெரி 10, நோக்கியா S40, நோக்கியா சிம்பயான் S60, ஆண்ட்ராய்டு 2.1 மற்றும் ஆண்ட்ராய்டு 2.2, விண்டோஸ் போன் 7, ஐபோன் 3GS / ஐஓஎஸ் 6 ஆகிய இயங்குதளங்கள் உள்ள போன்கள் வாட்ஸ்அப் மேம்படுத்தல்களுக்கு ஏற்றதாக இல்லை. இதனால் இவ்வகை போன்களுக்கு வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படுகிறது என வாட்ஸ்அப்-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பிளாக்பெரி ஓஎஸ், பிளாக்பெரி 10, நோக்கியா S40, நோக்கியா சிம்பயான் S60 ஆகிய இயங்குதளங்களுக்கான சேவை ஜூன் 30, 2017 வரை நீட்டிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply