விஜய் பேசிய முக்கிய விஷயத்தை ‘கட்’ செய்துவிட்டதா சன் டிவி?

விஜய் பேசிய முக்கிய விஷயத்தை ‘கட்’ செய்துவிட்டதா சன் டிவி?

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று நடைபெற்றது என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த விழாவில் விஜய் கொஞ்சம் அடக்கியே வாசித்தார். மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக அவர் எந்தவிதமான கருத்தையும் கூறவில்லை

இந்த நிலையில் சிஏஏ குறித்து அவர் ஒரு கருத்தை கூறியதாகவும் ஆனால் அதனை சன்டிவி கட் செய்து விட்டதாகவும் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. மக்களுக்கு தேவையான சட்டத்தை உருவாக்க வேண்டுமே தவிர சட்டத்தை உருவாக்கி விட்டு அதனை மக்களிடம் திணிக்கக் கூடாது என்று விஜய் பேசியதாக கூறப்படுகிறது

ஒரு சில விஜய் ரசிகர்கள் நேரில் இந்த விழாவில் கலந்து கொண்ட போது விஜய் இவ்வாறு பேசியதாகவும், ஆனால் தொலைக்காட்சிகளில் இது ஒளிபரப்ப விடவில்லை என்று கூறுகின்றனர் ஆனால் இன்னும் சிலரோ விஜய் அவ்வாறு பேசவில்லை என்றும் கூறிவருகின்றனர். உண்மையில் சிஏஏவுக்கு எதிராக விஜய் பேசினாரா இல்லையா என்பதை அவரே விளக்கினால் மட்டுமே இந்த குழப்பத்திற்கு விடை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.