5 போட்டிகளில் 48 ரன்கள்: என்ன ஆச்சு விராத் கோஹ்லிக்கு/

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக கேப்டன் விராட் கோலி கடந்த சில போட்டிகளில் சொதப்பி வருவது இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் சவாலாக உள்ளது

விராத் கோஹ்லி நன்றாக விளையாடினால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெறும் என்ற நிலையில் கடந்த சில போட்டிகளாக விராத் கோலி சொதப்பி வருவதால் இந்திய அணி தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை இழந்த இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக விராட் கோலியின் ஆட்டமே என்று கூறப்படுகிறது

கடந்த ஐந்து போட்டிகளில் விராட் கோலி எடுத்த ரன்கள் 3, 19, 2, 9, மற்றும் 15 என மொத்தம் 48 ரன்கள் தான் அவர் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து விராட் கோலியின் ரசிகர்கள் என்ன ஆச்சு கோஹ்லிக்கு? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்

விராத் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்தால் மட்டுமே இந்திய அணி வெற்றி நடை போடும் என்றும் அவர் தனது விளையாட்டில் முழு கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

Leave a Reply