shadow

மாயமான விமானம். கடலில் கிடைத்த 22 பொருட்கள் என்ன? அமைச்சர் மனோகர் பாரிக்கர் தகவல்

parrikar-an-32-missing-759சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டு சென்ற விமானம் ஏ.என். 32 குறித்து இதுவரை எந்த உறுதியான தகவல்களும் கிடைக்கவில்லை என அமைச்சர் அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

விமானத்தை தேடும் பணியில் கடற்படையைச் சேர்ந்த 13 கப்பல்கள், கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 4 கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபட்டு வந்தபோதிலும் இதுவரை விமானம் குறித்தோ அதில் பயணம் செய்தவர்களின் நிலை குறித்தோ தகவல்கள் இல்லை என்றும் கடலுக்கடியில் ஊடுருவிப் பார்க்கும் திறன்கொண்ட செயற்கைக்கோள்கள், விமானங்கள் மூலமாகவும் விமானத்தைத் தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் நேற்று மக்களவையில் கேள்வி நேரத்தில் அமைச்சர் பதிலளித்தார்..

மேலும் விமானம் காணாமல் போனதாக கருதப்படும் கடற்பகுதியிலிருந்து 22 மிதக்கும் பொருள்கள் கண்டறியப்பட்டதாகவும் ஆனால் அதை ஆய்வு செய்ததில் அது மாயமான விமானத்தின் பொருட்கள் இல்லை என்று தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மறைந்த விமானம் குறித்து தேசிய கடல்சார் தகவல் அறிவியல் மைய நிறுவனத்தின் இயக்குநர் சதீஷ் சி.செனாய் அவர்கள் கூறியபோது, “காணாமல் போன விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த கருப்பு பெட்டியில் சிக்னல் அளிக்கும் கருவி பழைய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதனால் அந்தக் கருவியினால் சிக்னல்களை வெளிப்படுத்த முடியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஏர் பிரான்ஸ் விமானத்தை கண்டறிய உதவிய கணிதமுறையை, இந்த மீட்பு பணியிலும் பயன்படுத்த ஆலோசித்து வருகிறோம்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply