பெங்களூரில் கேட்ட பயங்கர சத்தம்:

வேற்றுகிரக மனிதரின் வேலையா?

பெங்களூரில் இன்று மதியம் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்ததாகவும், அதிவேக ராக்கெட் பறந்ததாவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறி வருகின்றனர்

இந்த நிலையில் இதுகுறித்து வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கூறிய போது வங்க கடலில் புயல் தற்போது வடக்கு நோக்கி சென்று கொண்டிருப்பதால் நிலப்பரப்பின் மேலே வளி மண்டலத்தில் வெற்றிடம் உருவாகி இருக்கலாம் என்றும் அந்த வெற்றிடம் காரணமாக வளி மண்டலத்தில் வெடிப்பு ஏற்பட்டு இது போன்ற பயங்கர சத்தம் உருவாகி இருக்கும் என்றும் எனவே பொதுமக்கள் இந்த சத்தம் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்

இந்த விளக்கத்தை அடுத்தே தற்போது பெங்களூர் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் இந்த சத்தத்தால் பெங்களூர்வாசிகளின் பீதி இன்னும் அடங்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருசிலர் இந்த சத்தம் வேற்றுகிரக மனிதர்களின் வேலை என்றும் கூறி வருகின்றனர்.

Leave a Reply