shadow

லண்டன் டிராம் விபத்துக்கு காரணம் என்ன? திடுக்கிடும் தகவல்

5இன்று அதிகாலை லண்டனில் டிராம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருசிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள க்ராய்டான் என்ற பகுதியில் இன்று அதிகாலை டிராம் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, அங்குள்ள குறுகிய சாலைப் பகுதியில் வளைந்தபோது திடீரென தடம்புரண்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்புப்படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்த விபத்தில் 51 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. விபத்திற்குக் காரணமான டிராம் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. வளைவில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் டிராம் சென்றதால்தான் இந்த விபத்து நேர்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply