shadow

kochadaiyaan,kathi,ajith55

ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான், விஜய் நடித்து கொண்டிருக்கும் கத்தி, அஜீத் நடித்துக்கொண்டிருக்கும் அஜீத்55 ஆகிய மூன்று படங்களுக்கும் ஒரு அபூர்வ ஒற்றுமை இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான கோச்சடையான் திரைப்படத்தின் உரிமையை ஈராஸ் இண்டர்நெஷனல் நிறுவனம் ஏற்கனவே உரிமை பெற்றிருக்கும் நிலையில் சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கத்தி படத்தையும், கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் அஜீத் 55 படத்தின் உரிமையையும் ஈராஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் மூன்று பெரிய ஸ்டார்களின் படங்களின் உரிமையை பெற்றிருக்கும் நிறுவனம் இது ஒன்றுதான் என கோல்வுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கோச்சடையான் திரைப்படம் வரும் மே மாதம் 9ஆம் தேதியும், கத்தி திரைப்படம் 2014 தீபாவளி திருநாளிலும் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அஜீத் 55 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் இல்லை.

Leave a Reply