நேற்றைய போட்டியில் ஹைதராபாத் பணியிடம் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது

இந்த தோல்வி குறித்து கேப்டன் தோனி கூறியபோது நீண்ட இடைவெளிக்கு பின்னர் நாங்கள் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்து உள்ளோம். இதுகுறித்து சீரியஸாக ஆய்வு செய்ய வேண்டும்

கேட்சுகளை தவறவிட்டது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே போல் பந்துவீச்சாளர்கள் அதிகமாக நோபாகளை வீசியதும் தோல்விக்கு காரணமாக உள்ளது

நாங்கள் செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகிறோம் இதனை நாங்கள் திருத்திக் கொள்வோம் என்று தோனி கூறியுள்ளார்

Leave a Reply