இரவு ஷிப்ட்டில் விஜய்-முருகதாஸ் நடத்தும் ரகசிய ஷூட்டிங்.

vijay and murugadoss

துப்பாக்கி படத்தின் வெற்றி ஜோடிகளாக விஜய் -ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவிலும், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்திலும் முடிந்துவிட்டது.

தற்போது  ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் ரகசியமாக நடந்து வருகிறது. இந்த படத்தின் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். முதல் வேடம் சாதாரணமாக எல்லா படங்களிலும் விஜய் வரும் கெட்டப்பில் நடிக்கிறார். இரண்டாவது வேடம், இதுவரை விஜய் நடித்திராத கெட்டப் என்பதால், அந்த கெட்டப் வெளியே தெரிந்துவிட கூடாது என்பதற்காக படப்பிடிப்பை இரவு ஷிப்ட்டாக மாற்றிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.

படப்பிடிப்பு தினமும் இரவு 7மணிக்கு ஆரம்பமாகி, அதிகாலை 4மணீக்கு முடிகிறது. ராமோஜி பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படக்குழுவினர் தவிர வேறு யாரும் அங்கு இருக்கமாட்டார்கள். மாலை 6ஆறு மணிக்கு அனைவரும் வெளியேறிய பின்னர் இரவு 7மணிக்கு மேல் ரகசியமாக படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த படப்பிடிப்பு இன்னும் ஐந்து நாட்கள் நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

Leave a Reply