shadow

20 ஆண்டுகால சொத்துக்குவிப்பு வழக்கு. தீர்ப்பு எப்படி இருக்கும்?

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதித்தீர்ப்பை இன்று சுப்ரீம் கோர்ட் அறிவிக்கவுள்ளது. தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா மேற்கண்ட நால்வருக்கும் சிறை தண்டனை விதித்த தீர்ப்பை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தள்ளுபடி செய்து அனைவரையும் விடுதலை செய்தார்.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இருவர் இந்த வழக்கின் தீர்ப்பை தனித்தனியாக அறிவிக்க உள்ளனர். இதில் இருந்தே இந்த வழக்கின் தீர்ப்பில் இரு நீதிபதிகளுக்கும் மாறுபட்ட கருத்து இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருவரும் ஒரே கோணத்தில் தீர்ப்பு அளிப்பதாக இருந்தால் ஒரே தீர்ப்பாக வெளிவர வாய்ப்பு உள்ளது. ஆனால் தனித்தனியாக தீர்ப்பு வருவதால் ஒருவர் குற்றவாளி என்றும் இன்னொருவர் நிரபராதி அல்லது முதல் குற்றவாளி மரணம் அடைந்துவிட்டதால் வழக்கு தள்ளுபடி என்றும் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளதாக சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இவ்வாறு இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வந்தால் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டும். மீண்டும் இறுதி தீர்ப்பு வர ஆறுமாதமோ அல்லது ஒரு வருடமோ ஆகும்.

எனவே இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியல் குழப்பத்திற்கு முடிவாக இருக்காது என்றே கூறப்படுகிறது.

Leave a Reply