மைசூர், கங்கோத்ரி கிளேட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் போட்டியில், டாசில் வென்ற இந்தியா ஏ முதலில் பந்துவீசியது. வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி முதல் இன்னிங்சில் 429 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணி, 2ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்திருந்தது. மன்பிரீத் ஜுனேஜா 47, ஹர்ஷத் காதிவாலே 5 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர்.

ஜுனேஜா 84 ரன், காதிவாலே 27 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் மோத்வானி போராட, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 245 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. மோத்வானி 28 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் ஏ பந்துவீச்சில் வீராசாமி பெருமாள் 5, நிகிதா மில்லர் 4, கம்மின்ஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 184 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்துள்ளது. பிராத்வெய்ட் 34, பாவெல் 68, தியோநரைன் 9 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் கிர்க் எட்வர்ட்ஸ் 9 ரன்னுடன் களத்தில் உள்ளார். கைவசம் 7 விக்கெட் இருக்க, அந்த அணி 314 ரன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

Leave a Reply