shadow

நேதாஜியின் 64 ஆவணங்களை வெளியிட்டது மேற்கு வங்க மாநில அரசு
nethaji
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று அவரது வாரிசுகளும், பல சமூக நல ஆர்வலர்களும் தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில் சமீபத்தில் நேதாஜி குறித்த ஆவணங்களை விரைவில் வெளியிட முடிவு செய்திருப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். இந்நிலையில் இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த 64 ஆவணங்களை மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ளது.

கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையர் சுரஜித், நேதாஜி குறித்த ஆவணங்களை இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டார். டிஜிட்டல்  மயமாக்கப்பட்ட இந்த 64 ஆவணங்கள், 12,744 பக்கங்களை கொண்டவையாகும்.

இந்த 64 ஆவணங்களும் கொல்கத்தா காவல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 64 ஆவணங்கள் அடங்கிய சிடி பொதுமக்கள் மற்றும் நேதாஜி குடும்பத்தினருக்கு தரப்பட்டுள்ளன. மம்தா பானர்ஜியின் இந்த தைரியமான முடிவை மேற்குவங்க மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply