shadow

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமர் மோடிக்கு நெருக்கமான தொழிலதிபரான அதானியை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பல அரசியல் தலைவர்களை சந்தித்து பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணி ஆலோசனை நடத்திய நிலையில் திடீரென தொழிலதிபர் அதானியையும் சந்தித்துள்ளார்.

இதுகுறித்து அதானியே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களை சந்தித்தேன் என்றும், மேற்குவங்க மாநிலத்தில் முதலீடு செய்வது குறித்து அவரிடம் ஆலோசனை செய்ததாகவும் கூறியுள்ளார்

மேலும் அடுத்த ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற உள்ள சர்வதேச தொழிலதிபர் மாநாட்டிலும் கலந்து கொள்ள இருப்பதாக அவர் பதிவு செய்துள்ளார்.